Karthiga Maasam Vandhachu Lyrics in Tamil | Ayyappan Devotional Song

Karthiga Maasam Vandhachu Lyrics in Tamil | Ayyappan Devotional Song

 

Karthiga Maasam Vandhachu lyrics  புனிதமான கார்த்திகை மாதத்தின் ஆன்மீக பெருமையை கொண்டாடும் அழகான அய்யப்பன் பக்திப் பாடல். பாடல் முழுவதும் பக்தி, ஒளி, ஆன்மீக விழிப்புணர்வு நிறைந்துள்ளது.


🎶 Song Credits

🎵 Song Title: Karthiga Maasam Vandhachu

🎤 Singer: Kalaimamani Shri Veeramani Raju

🎼 Music Director: Abishek Raju

✍️ Lyrics: Arvind Kannan (Tamil)

Karthiga Maasam Vandhachu Song Lyrics  A beautiful devotional song celebrating the grandeur of the beginning of the holy month of Karthigai and the spiritual light of devotion to Lord Ayyappa — Karthigai Madhava Vanthachu.

புனிதமான கார்த்திகை மாதம் தொடங்கிய மகத்துவத்தையும், ஐயப்பன் பக்தியின் ஆன்மிக ஒளியையும் கொண்டாடும் அழகிய பக்திப் பாடல் — கார்த்திகை மாதம் வந்தாச்சு

🎵 பாடல்: கார்த்திகை மாதம் வந்தாச்சு
🎤 பாடகர்: கலைமாமணி திரு. வீரமணி ராஜு
🎼 இசை & கீபோர்ட் புரோகிராமிங்: அபிஷேக் ராஜு
✍️ வரிகள்: அரவிந்த் கண்ணன் (தமிழ்)

கார்த்திகை மாதம் வந்தாச்சு பாடல் வரிகள்

சுவாமியே சரணம் அய்யப்பா..!
ஹரிஹரசுதனே சரணம் அய்யப்பா..!

சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா..!
ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா..!
சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா!
ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா!

கார்த்திகை மாசம் வந்தாச்சு
மாலையும் போட்டாச்சு
ஊரெல்லாம் உன் பேச்சு ஐயப்பா!

விரதம் இருந்தோம் நாங்க விரந்த இருந்தோம்..
மாலை அணிந்தோம் துளசி மாலை அணிந்தோம்…

கார்த்திகை மாசம் வந்தாச்சு
மாலையும் போட்டாச்சு
ஊரெல்லாம் உன் பேச்சு ஐயப்பா!

பம்பையில் குளித்து பாவங்கள் கழித்து
பதினெட்டு படிகளை கடந்தோமே!
எங்களின் வாழ்வில் மங்களம் சேர்க்க
பந்தளம் நாடி வந்தோமே!

துளசி மாலை அணியும் வேளை!
எங்கள் நினைவே காந்தமலை!
துளசி மாலை அணியும் வேளை!
எங்கள் நினைவே காந்தமலை!

சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா
சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா

சபரிநாதனின் ஆட்சியைக் காண
சபரி பீடமே வந்தோமே!
விரத பலங்கள் கூடிய யாத்திரை
சபரியாத்திரை என்போமே!

சபரிநாதனின் ஆட்சியைக் காண
சபரி பீடமே வந்தோமே!
விரத பலங்கள் கூடிய யாத்திரை
சபரியாத்திரை என்போமே !

கார்த்திகை பிறந்தாலே
குருநாதன் திருநாளே!
அருள்தரும் ஐயப்பனின்
சரண கோஷம் வரும் நாளே!

கார்த்திகை பிறந்தாலே..
குருநாதன் திருநாளே …
அருள்தரும் ஐயப்பனின்…
சரண கோஷம் வரும் நாளே..

கருநீலமே ஆறு வாரமே!
எங்கள் உடையாய் அணிந்தோமே!
கருநீலமே ஆறு வாரமே !
எங்கள் உடையாய் அணிந்தோமே!

சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா
சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா

நெய் அபிஷேகம் திவ்ய தரிசனம்
ஜோதி ரூபனின் அருள் என்றோம்
தங்க அம்பலம் காண வேண்டிய!
ஐந்து மலைகளை கடக்கின்றோம்

நெய் அபிஷேகம் திவ்ய தரிசனம்
ஜோதி ரூபனின் அருள் என்றோம்
தங்க அம்பலம் காண வேண்டிய
ஐந்து மலைகளை கடக்கின்றோம்

சந்தன வாசத்திலே
வெண் சங்கின் நாதத்திலே
ஆனந்த மாமலைக்கு
புனித யாத்திரை வந்தோமே

சந்தன வாசத்திலே
வெண் சங்கின் நாதத்திலே
ஆனந்த மாமலைக்கு
புனித யாத்திரை வந்தோமே
குலதெய்வமே….

சிவ பாலனே…!
உந்தன் சந்நதி சேர்ந்தோமே
குலதெய்வமே
சிவ பாலனே…!
உந்தன் சந்நதி சேர்ந்தோமே

சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா
சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா

கார்த்திகை மாசம் வந்தாச்சு
மாலையும் போட்டாச்சு
ஊரெல்லாம் உன் பேச்சு ஐயப்பா

பம்பையில் குளித்து பாவங்கள் கழித்து
பதினெட்டு படிகளை கடந்தோமே
எங்களின் வாழ்வில் மங்களம் சேர்க்க
பந்தளம் நாடி வந்தோமே

துளசி மாலை அணியும் வேளை
எங்கள் நினைவே காந்தமலை
துளசி மாலை அணியும் வேளை
எங்கள் நினைவே காந்தமலை

சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா
சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா

✨ Karthiga Maasam Vandhachu Song Meaning (Tamil)

இந்த பாடல் கார்த்திகை மாதத்தின் துவக்கத்தில் ஏற்படும் ஆன்மீக மாற்றத்தையும், அய்யப்பன் பக்தியின் மகிமையையும் எடுத்துக்காட்டுகிறது. பாடலின் ஒவ்வொரு வரியிலும் பக்தர்களின் வாழ்வில் வரும் ஒளி, அமைதி, நம்பிக்கை ஆகியவை மிகச் சிறப்பாக வர்ணிக்கப்படுகின்றன.
இந்தப் பாடல் யாத்திரியின் புனித உணர்வையும், பந்தளத்திற்கான அவர்களின் ஆன்மிகப் பயணத்தையும் உணர்ச்சியோடு சொல்கிறது.


❓ FAQs – Karthiga Maasam Vandhachu

Q: இந்த பாடலை யார் பாடியுள்ளார்?
A: Kalaimamani Veeramani Raju அவர்கள் பாடிய புனிதமான அய்யப்பன் பக்தி பாடல்.

Q: இந்த பாடல் எந்த வகை?
A: இது ஒரு Ayyappan Tamil Devotional Song.

Q: கார்த்திகை மாதம் வந்தாச்சு பாடல் எங்கு பிரபலமாக உள்ளது?
A: அனைத்து அய்யப்பன் யாத்திரை காலங்களிலும் மிக பிரபலமாக பாடப்படும் பாடல்.


📌 Related Ayyappa Devotional Songs


 

Karthiga Maasam Vandhachu Video song youtube link

Leave a Reply